மீண்டும் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எமனாக வந்த மும்பை இந்தியன்ஸ்! 

அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் டிஎஸ்கே அணியை எம்ஐஎன்ஒய் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 
மீண்டும் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எமனாக வந்த மும்பை இந்தியன்ஸ்! 

எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் ஜூலை 13 முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் அணிகளும் 3 அணிகளை விலைக்கு வாங்கி விளையாடுகிறது. அதில் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் முறையே டிஎஸ்கே (டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்), எம்ஐஎன்ஒய் (மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்), எல்ஏகேஆர் (லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்) ஆகிய அணிகள் விளையாடுகின்றன. மேலும் அமெரிக்காவினை சேர்ந்த 3 அணிகளுமாக மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.  

இதில் 4 அணிகள் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் டிஎஸ்கே, எம்ஐஎன்ஒய், சீயாட்டில் ஆர்கஸ், வாஷிங்டன் ப்ரீடம் ஆகிய அணிகளும் தேர்வாகின. 

ஐபிஎல் போன்றே ப்ளே-ஆஃப் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. 4வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி எலிமினேட்டரில் வென்று குவாலிஃபையர் 2 போட்டியில் டிஎஸ்கே அணியுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த டிஎஸ்கே அணி 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அதிகபட்சமாக கான்வே 38 ரன்களும் மிலிந் குமார் 37 ரன்களும் எடுத்தனர். டு பிளெஸ்ஸி 56 ரன்களிலும் மில்லர் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கினர். அடுத்து ஆடிய எம்ஐஎன்ஒய் அணியில் தொடக்க வீரர் ஜஹாங்கீர் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர் டெவால்ட் பிரேவிஸ் 41 ரன்களும் டிவ் டேவிட் 33 ரன்களும் எடுத்து அசத்த இறுதியில் டேவிட் வைஸ் 11 பந்துகளில் 19 ரன்கள் அடித்தும் வெற்றிக்கு வித்திட்டனர். 19ஓவர்களில் 162/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. 

இறுதிப் போட்டி வரும் திங்கள் கிழமை இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சீயாட்டில் ஆர்கஸ் அணியுடன் மோதவுள்ளது. 

ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு எமனாக இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிதான். இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 36 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் 20 போட்டிகளிலும் வென்று முன்னிலையில் உள்ளது. தற்போது இதேபோல அமெரிக்காவிலும் சூப்பர் கிங்ஸ்க்கு எமனாக மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி மாறியுள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com