நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 233ஆக உயர்வு; 900 படுகாயம்

ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2023, 12:49 am

DIN

ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது.

இரவு முதல் விடியவிடிய மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 900 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலசோா் மாவட்டத்தில் தடம்புரண்டிருந்த பெங்களூரு-ஹெளரால் மீதும், நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலுடனும் மோதி விபத்துக்குள்ளானது. 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்களின் விபத்து நேர்ந்தது.

விபத்து குறித்து தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த வீரர்கள் உள்பட உள்ளூர் மக்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட பயணிகள் பாலசோா் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சோரோ, கோபால்பூா் மற்றும் காந்தாபடா பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், ரயில் விபத்தில் சிக்கியிருந்த பெட்டிகளிலிருந்து 207 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது. 

விபத்து நடந்த இடத்தில் விடியவிடிய மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.