ம.பி.யில் கார்-லாரி மோதல்: 7 பேர் பலி, 2 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் கார் மீது லாரி மோதி விபத்தில் 7 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் கார் மீது லாரி மோதி விபத்தில் 7 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். 

சிதி-திகார் சாலை அருகே டோல் கிராமத்தின் அருகே காலை 9.30 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக சித்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

வேகமாக வந்த லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சம்பவ இடத்தில் போலீஸார் குழு விரைந்துள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com