
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின், பவ்ரா கோலியரி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் பவ்ரா கோலியரி பகுதியில் உள்ள பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சுரங்க விபத்தில் 3 பேர் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியுள்ளதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
படிக்க: பதிவுகளை அழித்து இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய கஜோல்!
உள்ளூர் மக்களின் உதவியுடன் 3 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிலக்கரி சுரங்க விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...