

ஒடிசா ரயில் விபத்து குறித்து நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் கோரமண்டல் ரயில் உள்பட மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் 288 பேர் பலியாகினர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பஹாநாக பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் லூப் லைனில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. மெயின் லைனில் அதிவேகமாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென்று லூப் லைனுக்குள் நுழைந்து சரக்கு ரயிலின் மீது மோதியது. சில நொடிகளில் மெயின் லைனில் வந்த பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதி கோர விபத்து நடந்தது.
இந்த விபத்துக்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிபிஐ இணை இயக்குநர் விப்லவ் குமாா் செளதரி தலைமையில் 6 அதிகாரிகள் கொண்ட குழு கடந்த வாரம் விசாரணையை தொடங்கியது.
இந்த விசாரணையில் முதல்கட்ட தகவலை சிபிஐ வெளியிட்டுள்ளது.
அதில், விபத்து நடந்த பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், கணினி முறையில் இயங்கும் இண்டர்லாக்கிங் அமைப்பை நிறுத்திவிட்டு, ரயில் நிலைய அதிகாரி பச்சை சமிக்ஞை (பச்சை சிக்னல்) கொடுத்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.