திருப்பூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருப்பூரில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.
குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.


திருப்பூர்: திருப்பூரில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் மங்கலம் சாலையில் சுல்தான்பேட்டை பகுதி ஏ.டி காலனியில் கடந்த 3 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யாமல் அலட்சியம் காட்டுவதாகவும், மற்ற பகுதிகளில் குடிநீர் வினியோகம் முறையாக நடைபெறும் போது தங்களுக்கு உப்பு கலந்த நீரை மட்டுமே வினியோகம் செய்வதாகவும் அதனை குடிக்க முடியாமல் உள்ளதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்கள் மற்றும் தங்களுக்கு வினியோகம் செய்யும் நீரை மங்கலம் சாலையில் வைத்து100க்கும் மேற்பட்டோர் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

திருப்பூர் மங்கலம் பிரதான சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் செய்யமுடியவில்லை எனவும் சீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெறுவதாகவும் ஓரிரு நாள்களில் குடிநீர் வினியோகம் தொடங்கும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com