விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மத்திய அரசு மிரட்டியது: ட்விட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு

அரசுக்கு எதிரான பதிவுகளை இருட்டடிப்பு செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்தை மிரட்டியதாக மத்திய அரசின் மீது அந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

News image
Updated On :13 ஜூன் 2023, 5:17 am

அரசுக்கு எதிரான பதிவுகளை இருட்டடிப்பு செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்தை மிரட்டியதாக மத்திய அரசின் மீது அந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது ட்விட்டர் நிறுவனத்துக்கு அரசு கொடுத்த அழுத்தம் குறித்து ஜாக் டோர்சி தற்போது தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பேசியுள்ளார்.

ஜாக் டோர்சி கூறியதாவது:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது, அதுதொடர்பான பதிவு மற்றும் அரசை விமர்சிக்கும் குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களின் ட்வீட்களை இருட்டடிப்பு செய்யுமாறு இந்திய அரசு ட்விட்டரிடம் கூறியது.

மேலும், இந்தியாவில் ட்விட்டரை முடக்குவோம் என்றும், ட்விட்டர் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதாகவும் மிரட்டியது. அதனை செய்யவும் செய்தார்கள். இத்தனைக்கும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு” என்று குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

ஜாக் டோர்சியின் இந்த குற்றச்சாட்டு புயலைக் கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.