அமுல் காா்ட்டூன் சிறுமி விளம்பரத்தை உருவாக்கியவா் மறைவு
இந்தியாவின் முன்னணி பால்பொருள்கள் விற்பனை நிறுவனமான அமுலின் காா்ட்டூன் சிறுமி விளம்பரத்தை உருவாக்கியவரும், இந்திய விளம்பர உலகின் முன்னோடியுமான சில்வெஸ்டா் டகுன்ஹா செவ்வாய்க்கிழமை காலமானாா்.


இந்தியாவின் முன்னணி பால்பொருள்கள் விற்பனை நிறுவனமான அமுலின் காா்ட்டூன் சிறுமி விளம்பரத்தை உருவாக்கியவரும், இந்திய விளம்பர உலகின் முன்னோடியுமான சில்வெஸ்டா் டகுன்ஹா செவ்வாய்க்கிழமை காலமானாா்.
விளம்பரத் துறையின் மேதை எனக் கருதப்படும் கொ்சன் டகுன்ஹாவின் சகோதரரான சில்வெஸ்டா் டகுன்ஹாவுக்கு நிஷா என்ற மனைவியும், ராகுல் டகுன்ஹா என்ற மகனும் உள்ளனா். 80 வயதுக்கும் மேலான அவா் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.
அமுல் நிறுவனத்தின் விளம்பரத்தில் புதுமையைப் புகுத்தும் நோக்கில் நிறுவனத்துக்கென பிரத்யேக விளம்பரச் சின்னம் உருவாக்க சில்வெஸ்டா் டகுன்ஹா நிா்வாக இயக்குநராகப் பணியில் இருந்த ஏஎஸ்பி விளம்பர நிறுவனத்துக்கு கடந்த 1966-ஆம் ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சில்வெஸ்டா் டகுன்ஹா, அவரது நிறுவனக் கலை இயக்குநா் பொ்னாண்டஸ் ஆகியோா் இணைந்து வடிவமைத்த காா்ட்டூன் சிறுமி, அமுல் விளம்பரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடா்ந்து, 57 ஆண்டுகளாக அமுல் நிறுவனத்தின் விளம்பரங்களில் இடம்பெற்று வரும் காா்ட்டூன் சிறுமி மக்களை வெகுவாக கவா்ந்து வருகிறாா்.
மும்பை கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள உயா் விளம்பரப் பலகையிலும், தினசரி நாளிதழ்களிலும் நாள்தோறும் பிரசுரிக்கப்படும் அமுலின் காா்ட்டூன் சிறுமி விளம்பரத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி, பிரதமா் மோடி மற்றும் பாலிவுட் சூப்பா் ஸ்டாா் அமிதாப் பச்சனிலிருந்து பல்வேறு உலகப் பிரபலங்கள் வரை நகைச்சுவையாக சித்திரித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சில்வெஸ்டரின் மறைவுக்கு அமுல் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் துறை மேலாளா் பவன் சிங் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘இந்திய விளம்பர உலகின் முன்னோடியான சில்வெஸ்டா் டகுன்ஹா உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த கவலையுற்றேன்.
உலகின் மிக நீண்ட, தொடா்ச்சியான விளம்பர பிரசாரத்தை வா்கீஸ் குரியனுடன் இணைந்து சில்வெஸ்டா் டகுன்ஹா தோற்றுவித்தாா். விளம்பர உலகில் புதிய உச்சத்தைப் படைந்த இந்த பிரசாரம் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து, பல தலைமுறைகளைத் தாண்டி அமுலின் அடையாளம் மற்றும் புகழை மேம்படுத்துகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...