தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணீஷ் சிசோடியா, திகார் சிறையில் நேற்று அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியாவின் தனிச் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. தேவிந்தர் சர்மா, மணீஷ் சிசோடியாவுக்காக சிம் கார்டு, போன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு தேவிந்தர் சர்மா கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறையும் தேவிந்தர் சர்மாவிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (28.7.2026) 12 ராசிகளுக்கும்! கன்னி ராசிக்கு வெற்றி!

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 28) - லாபம் யாருக்கு?
ரூ. 25 கோடி மோசடி வழக்கு: நடிகை கெளதமியிடம் அமலாக்கத் துறை விசாரணை

இணையதள வாகன அபராத முறையை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்: அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநா்கள் தீர்மானம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


