பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண் ஊழியர்களுக்கு தெலங்கானா அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8(நாளை) விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

News image
Updated On :7 மார்ச் 2023, 1:19 pm

DIN

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8(நாளை) விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தெலங்கானா மாநில தலைமைச் செயலாளர் சாந்திகுமாரி வெளியிட்ட அறிக்கையில், 

பெண்களைப் போற்றும் சர்வதேச மகளிர் தினம் நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

மேலும், அன்றைய தினம் ரூ.750 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ மகளிர் அமைப்பினருக்கு வட்டியில்லா வங்கி கடனுதவிகளை நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் வழங்க உள்ளார் என்று அவர் கூறினார்.

Story image

தெலங்கானா அரசின் இந்த அறிவிப்பையடுத்து பெண் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.