மது அருந்திவிட்டு காவல்நிலையத்தில் நடனமாடிய 5 காவலர்கள் இடைநீக்கம்

ஜார்க்கண்டில் மது அருந்திவிட்டு காவல்நிலையத்தில் நடனமாடிய 5 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
மது அருந்திவிட்டு காவல்நிலையத்தில் நடனமாடிய 5 காவலர்கள் இடைநீக்கம்

ஜார்க்கண்டில் மது அருந்திவிட்டு காவல்நிலையத்தில் நடனமாடிய 5 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஜார்க்கண்ட் மாநிலம், கோடா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நேற்று அங்குள்ள காவலர்கள் மது அருந்திவிட்டு நடனமாடியுள்ளனர். இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து இவ்விவகாரத்தில் காவல் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் குறிப்பிட்ட காவல்நிலையத்தில் காவலர்கள் மது அருந்திவிட்டு நடனமாடியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 காவல் அதிகாரிகள் உள்பட 5 காவலர்களை இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 

மேலும் காவலர்களின் இந்த செயலுக்கு முதல்வர் பாபு லால் மராண்டி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களே காவல்நிலையத்தில் மது அருந்திவிட்டு நடனமாடிய சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com