கமல்ஹாசனை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கில் வெற்றிபெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் தலைவா் நடிகா் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.


ஈரோடு கிழக்கில் வெற்றிபெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்யம் தலைவா் நடிகா் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான செல்வப் பெருந்தகையுடன் இன்று என்னை சந்தித்தார்.
எனது ஈரோடு பரப்புரைக்காக நன்றி தெரிவித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கும் அவரது குரலுக்காகக் காத்திருக்கிறேன் என அவரை வாழ்த்தினேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.
முன்னதாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திலும் பங்கேற்று கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...