சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

திருச்சி என்ஐடியில் டெக்னிக்கல் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி)
Updated On :28 பிப்ரவரி 2026, 8:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் இளநிலை பொறியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 22

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Technical Assistant (CSG) – 1

பணி: Technical Assistant (DEE) – 1

பணி: Technical Assistant (Production/Central Workshop) – 1

பணி: Technical Assistant (CSE) – 1

பணி: Technical Assistant (Civil) – 1

பணி: Junior Engineer (Electrical) – 1

பணி: Junior Engineer (Civil) – 2

பணி: Library and Information Assistant – 1

பணி: Technician (EEE) – 1

பணி: Technician (CSG) – 2

பணி: Technician (ICE) – 1

பணி: Technician (Central Workshop) – 2

பணி: Technician (ECE) – 1

பணி: Technician (Chemical) – 1

பணி: Technician (Chemistry) – 1

பணி: Technician (EMD) – 1

பணி: Senior Technician (EEE) – 1

பணி: Senior Technician (CSG) – 1

பணி: Senior Technician (ICE) – 1

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ., பி.டெக் அல்லது எம்சிஏ அல்லது டிப்ளமோ முடித்திருப்பவர்கள், கலை, அறிவியல், வணிகம், நூலக அறிவியல் பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 25.3.2026 தேதியின்படி டெக்னீசியன் பணிக்கு 27 வயதிற்குள்ளும், டெக்னிக்கல் உதவியாளர், இளநிலை பொறியாளர் பணிக்கு 30-க்குள்ளும், முதுநிலை டெக்னீசியன் பணிக்கு 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, இதர அனைத்து பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: என்ற அதிகாரப்பூர்வ https://www.nitt.edu இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட புகைப்படம், தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து "The Registrar, National Institute of Technology Tiruchirappalli, Tiruchirappalli-620015, Tamil Nadu" என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப உறையின் மீது நீங்கள் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை தெளிவாக பெரிய எழுத்துக்களில் குறிப்பிடவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.3.2026

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி நாள்: 31.3.2026

விண்ணப்பிப்போரின் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Online applications are invited from Indian nationals possessing excellent academic record and relevant work experience for recruitment to the post of ‘Technical Assistant , Junior Engineer , Library and Information Assistant’ in National Institute of Technology, Tiruchirappalli.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.