ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநருக்கு அடுத்த கௌரவம்

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ், அடுத்த கௌரவத்துக்குத் தயாராகிவிட்டார். அதுதான், வந்தே பாரத் ரயில் ஓட்டுநர் என்ற அங்கீகாரம்.
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநருக்கு அடுத்த கௌரவம்
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநருக்கு அடுத்த கௌரவம்


மும்பை: ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ், அடுத்த கௌரவத்துக்குத் தயாராகிவிட்டார். அதுதான், வந்தே பாரத் ரயில் ஓட்டுநர் என்ற அங்கீகாரம்.

மும்பை - புனே - சோலாபூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை தனது மகுடத்தில் சூட்டிக்கொண்டுள்ளார் சுரேகா யாதவ்.

34 ஆண்டுகள் ரயில் ஓட்டுநர் பணியில் சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கும் சுரேகா யாதவ், வந்தே பாரத் ரயிலை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த பணிக்காக அவர் மிகக் கடினமான பயிற்சிகளுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். மிக வேகத்தில் வரும் ரயிலில் இருந்து கொண்டு ரயில் சமிக்ஞைகளை கவனித்தல், புதிய அதி நவீன கருவிகளை இயக்குவது, சக ஓட்டுநருடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், ரயிலின் வேகம் என அனைத்துக்குமான பயிற்சிகள் முடித்து, அவர் பணியிலும் இணைந்துவிட்டார்.

1989ஆம் ஆண்டு, உதவி ரயில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்த சுரேகா, 1996ஆம் ஆண்டு சரக்கு ரயில் ஓட்டுநராக பணி உயர்வு பெற்றார். படிப்படியாக அவரது பணியில் உயர்ந்து தற்போது வந்தே பாரத் ரயில் ஓட்டுநராகியுள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 1,500 பெண் ரயில் ஓட்டுநர்கள் இருப்பதாக இந்திய ரயில்வேயின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com