
மகாராஷ்டிரத்தில் ஓடும் லாரியிலிருந்து ஆடுகளைத் திருடிய நபர் காரில் தப்பிச்சென்ற விடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் இகாட்புரி நெடுஞ்சாலையில் லாரிகளில் ஆடுகள் விற்பனைக்கு ஏற்றிச்செல்லப்பட்டன. அப்போது ஓடும் லாரியில் ஏறிய நபர் ஒருவர் லாரியிலிருந்த ஆடுகளை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே போட்டு திருட முயன்றுள்ளார்.
5க்கும் மேற்பட்ட ஆடுகளை தூக்கி சாலையில் வீசிவிட்டு, லாரிக்கு பின்னால் சென்ற காரில் இறங்கு தப்பித்துள்ளார். இதனை வாகன ஓட்டி ஒருவர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...