தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகியதையடுத்து அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலேவிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் நேற்று திடீரென அறிவித்தார். மேலும் ஒரு குழுவை நியமித்து அடுத்த தலைவரை தேர்வு செய்யும்படி கூறியுள்ளார்.
இது அவரது கட்சித் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவராக அவர் தொடர வேண்டும் என்று கட்சியினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பதவி விலகும் முடிவை திரும்பப் பெறுமாறு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் சரத் பவார் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக என்று கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து சரத் பவாரின் மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலேவை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கட்சியின் தலைவர் பதவிக்கு சுப்ரியா சுலே தேர்வு செய்யப்படலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எச்.எஸ்.பி.சி. விதிமீறல்: ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

