தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. 
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. 

சுதிப்தோ சென் இயக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்து பெண்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இது வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் இருப்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேரளத்தில் அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், (மே 2) வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

ஆனால் கேரள உயர்நீதிமன்றத்தில் கோடை விடுமுறையால் தற்போது வழக்கு விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

இந்த படம் நாளை(மே 5) வெளியாகவுள்ள நிலையில் இன்றே வழக்கை விசாரித்து தடை விதிக்க வேண்டும் என்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று இந்த மனுவை ஏற்றுக்கொள்ள மீண்டும் மறுத்துவிட்டது. 'நடிகர்கள், தயாரிப்பாளர் என அனைவரும் தங்கள் உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள் என்பதை நினைக்க வேண்டும். படங்களை தடை செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். படம் ஏற்கத்தக்கதா என்பதை பார்வையாளர்கள் முடிவு செய்யட்டும்' என்று கூறி பட வெளியீட்டிற்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர். 

மேலும் இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தை நாட மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com