

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே கலவரம் நீடித்து வந்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
எனினும் பொதுமக்களின் வெளியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
மணிப்பூர் மக்கள்தொகையில் 53 சதவீதம் உள்ள மைதி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இவர்களில் பெரும்பாலானோர் ஹிந்துக்கள்.
அதேநேரம், மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினா், மைதி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
மைதி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்க எதிா்ப்பு தெரிவித்து, மாநிலத்திலுள்ள 10 மலைப் பகுதி மாவட்டங்களில், பழங்குடியின மாணவா் சங்கம் சாா்பில் பேரணி நடத்தப்பட்டது.
பேரணியின்போது மைதி சமூகத்தினர் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இரு குழுக்களுக்கு இடையேயான மோதல் கலவரமாக மாறி வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வாகனங்கள், உடமைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இந்திய ராணுவம் அனுப்பப்பட்டது. அசாம் ஆயுதப் படையினரும் அனுப்பப்பட்டனர். அவர்கள் கலவரக்காரர்களிடமிருந்து பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
இதுவரை 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், எனினும் பொதுமக்களின் வெளியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.