

மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான தீபக் ஜோஷி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கைலாஷ் ஜோஷியின் மகன் தீபக் ஜோஷி, அக்கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் கமல்நாத் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பாஜகவில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர் தீபக் ஜோஷி. மாநில பாஜக அரசு தனது தந்தை கைலாஷ் ஜோஷியின் பாரம்பரியத்தைப் புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
60 வயதுடைய தீபக் ஜோதி, கடந்த 2003ல் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பாக்லியில் இருந்து முதல் முறையாக சட்டப்பேரவையில் நுழைந்தார். பின்னர் அதே மாவட்டத்தில் உள்ள ஹட்பிப்லியா தொகுதியில் (2008 மற்றும் 2013) என இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மூன்றாவது தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஜோஷி முதல்வர் சிவராஜ் சிங் சௌகானின் அமைச்சரவையில் சேர்ந்த நிலையில், 2018 வரை அதன் உறுப்பினராக இருந்தார்.
மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.