

உத்தரப் பிரதேசத்தின், ஆக்ரா மாவட்டத்தில் உயர் அழுத்த மின்கம்பியில் பாராசூட் சிக்கியதில் ராணுவ தளபதி ஒருவர் விழுந்து பலியானார்.
மல்புரா காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் கமாண்டோ அங்கூர் சர்மாவின் பாராசூட் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கியது.
இந்த சம்பவத்தில் சர்மா உயரத்தில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தளபதி சர்மா ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அங்கூர் சர்மா ஜம்மு-காஷ்மீரில் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.