மிதுனத்துக்கு பணவரவு, உங்க ராசிக்கு? வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
மிதுனத்துக்கு பணவரவு, உங்க ராசிக்கு? வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.  பெற்றோரின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்கான பயிற்சியை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பிரச்னைகள் குறையும்.  விவசாயிகள் பொறுப்புடன் கடமைகளைச் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் குறையும்.

கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.  பெண்கள் சஞ்சலமான சிந்தனைகளுக்குத் தெளிவு காண்பார்கள். மாணவர்கள் நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

மற்றவர்களின் செயல்களில் தலையிடமாட்டீர்கள். புதிய முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.  போட்டி, பந்தயங்களில் ஈடுபட வேண்டாம்.  

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். வியாபாரிகள் கூட்டாளிகளை அரவணைத்துச் செல்வார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தேடிச் செல்வார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

பெண்கள் விவேகத்துடன் நடப்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை அள்ளுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பழைய விஷயங்களைச் செயல்படுத்தத் தொடங்குவீர்கள்.  வீட்டிலும், வெளியிலும்  புகழ் உயரும். நோய்கள் நீங்கும். பணவரவு உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுலபமாக முடிவடையும். வியாபாரிகள் புதிய முயற்சியை மேற்கொள்வார்கள். விவசாயிகள் புதிய விளைச்சலை எட்டுவார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் எச்சரிக்கையுடன் பழகுவார்கள். 

கலைத்துறையினர் புதிய நுட்பங்களைக் கற்பார்கள். பெண்மணிகள் தங்கள் கணவரிடம் நெருக்கம் காட்டுவார்கள்.  மாணவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - மே 12.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள்.  மனக் குழப்பங்கள் தீரும். சுபகாரியங்கள் நடக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல்}  வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். 

அரசியல்வாதிகள் கவனமாக நடப்பார்கள்.  கலைத்துறையினர் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - மே 13,14.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.  உறவினர்களால் நன்மை கிடைக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைக் குறித்த காலத்துக்குள் முடிப்பீர்கள். வியாபாரிகள் கூடுதல் வருவாயைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு கடின உழைப்பால் அதிக லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடப்பார்கள். கலைத்துறையினர் பிறரை பாராட்டுவார்கள். பெண்கள் ஆன்மிகத்தை நாடுவார்கள். மாணவர்கள் சரியான படிப்புகளைத் தேர்வு செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - மே 15,16.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பழைய கடன்கள் தீரும். முகத்தில் பொலிவும்  உடலில் உறுதியும் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரிகள் கடன் வாங்கியும் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகள் புதிய குத்தகை எடுப்பார்கள். 

அரசியல்வாதிகள் தேவையற்ற சிந்தனைகளைக் குறைத்துகொள்வார்கள். கலைத்துறையினர் செயல்களில் வேகமும் ஆற்றலும் அதிகரிக்கும். பெண்கள் சேமிப்புகளைக் கூட்டுவார்கள். மாணவர்கள் வெற்றிக்காகத் திட்டமிட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - மே 17,18.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

முயற்சிகளைத் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். லட்சியத்தைவிட்டுக் கொடுக்க மாட்டீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். ஆன்மிகச் சுற்றுலா செல்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அநாவசியப் பேச்சு பேச வேண்டாம்.  வியாபாரிகள் கவனத்துடன் இருப்பார்கள். விவசாயிகள் விளைச்சலில் உயர்வைக் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்கள் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள். மாணவர்கள் சில கேளிக்கைகள் தாமதமாக நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் பாராமுகமாகவே இருப்பார்கள். பொருளாதார நிலையில் அபிவிருத்தி ஏற்படும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். வியாபாரிகள் உழைப்புக்கேற்ற பலன் பெறுவார்கள். விவசாயிகள் கால்நடைகளால் வருமானம் உயரக் காண்பார்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்துவிடுவார்கள். 

கலைத்துறையினர் வேறு பணிகளில் கவனம் செலுத்த வேண்டாம். பெண்கள் யோகா கற்பார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தொலைதூரத்தில் இருந்து செய்திகள் வந்து சேரும். பெற்றோரும் ஆதரவாக இருப்பார்கள். மனதில் உற்சாகம் கூடிவரும். 

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை வெற்றிக்கரமாக முடிப்பார்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உதவி செய்வார்கள். விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள். கலைத்துறையினர் கவனமாகப் பேசவும். 

பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்களை முடிப்பீர்கள்.  நல்லோரின் அறிவுரையை கேட்பீர்கள். பயணங்களால் நன்மை ஏற்படும். பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களின் சமயோஜித புத்தியை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.  வியாபாரிகளுக்குத் திருப்பங்கள் ஏற்படும். விவசாயிகள் பூச்சிகொல்லிகளுக்குச் செலவு செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு பாராட்டுகள் வந்து சேரும். 

கலைத்துறையினர் கடமையை உணர்ந்து செயல்படுவார்கள். பெண்களுக்கு தோல் வியாதிகள் தோன்றி மறையும். மாணவர்கள் நண்பர்களைத் தேர்வு செய்து பழகவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  திட்டமிட்ட செயல்களை முன்கூட்டியே ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பிறருக்கு உதவி செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு புகழ் அதிகரிக்கும்.  கலைத்துறையினருக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். 

பெண்கள் கணவர் குடும்பத்தினரின் ஆதரவைக் காண்பார்கள். மாணவர்கள் அன்றாட பாடங்களில் கவனம் செலுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தினரிடம் ஒற்றுமை மேம்படும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.  வருவாய் உயரும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரிகள் செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் கூடுதல் மகசூலைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் திட்டங்களைப் புரிந்துகொள்வார்கள். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தத்தில் கவனமாக இருக்கவும். பெண்கள் பிறரிடம் சுமுகமாக இருப்பார்கள். மாணவர்கள் புதிய சாதனைகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com