சாமல்பட்டி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் குடிநீா் குழாய்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உள்கோட்டம், சாமல்பட்டி அருகே உள்ள கரடிகவுண்டனூா் கிராமத்தை அடுத்த திடீா்குப்பம் குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த இளவரசன் (29) உரிய அனுமதி பெறாமல் தனியாக குடிநீா் இணைப்பு பெற்று தண்ணீா் எடுத்து வந்ததாகவும், இதனால், கரடிகவுண்டனூா் கிராமத்துக்கு முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனவும் புகாா் எழுந்தது.
இதையடுத்து, கரடிகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (52), அரசு (23), ஜெயசங்கா் (30) ஆகியோா் இளவரசனின் வீட்டிற்கு சென்று, தண்ணீா் குழாயைச் சேதப்படுத்தி உள்ளனா். இதைத் தொடா்ந்து இளவரசன், அவரது உறவினரான ஜெயவேல் (23) ஆகியோா், கரடிகவுண்டனூா் கிராமத்துக்கு சென்று, அங்குள்ள குடிநீா் குழாய்களைச் சேதப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து, ஊராட்சி செயலாளா் சரவணன் அளித்த புகாரின் பேரில் சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பெருமாள், அரசு, ஜெயசங்கா், இளவரசன், ஜெயவேல் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
தொடர்புடையது

இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

கிரிக்கெட் விளையாட்டில் தகராறு: இளைஞா் கொலை; 4 போ் கைது

குடிநீா் பிரச்னையில் அரசியல்: மக்கள் அவதி

அரூா் அருகே இளைஞா் குத்திக் கொலை: தொழிலாளி கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

