நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி: குமாரசாமி அறிவிப்பு

கர்நாடகத்தில் தனது நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என மஜத தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார். 
குமாரசாமி  (கோப்புப் படம்)
குமாரசாமி (கோப்புப் படம்)

கர்நாடகத்தில் தனது நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என மஜத தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 50 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த முறை எனது நிபந்தனைகளை நிறைவேற்ற ஒப்புக்கொள்ளும் கட்சியுடன் செல்வேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் மே 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 224 தொகுதிகளிலும் சராசரியாக 72.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 2,615 வேட்பாளா்கள் 224 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனா். காங்கிரஸ் - 223, பாஜக - 224, மஜத - 209 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தியிருந்தன. இது தவிர, சிபிஐ, சிபிஎம், பகுஜன்சமாஜ்கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ஐஜத போன்ற பல கட்சிகள் தோ்தலில் போட்டியிட்டுள்ளன. ஆனாலும், பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் தனிக்கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. ஒரு சில கருத்துக் கணிப்புகளில் பாஜக தனிக்கட்சியாக அதிக இடங்களைப் பெறும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை தொங்கு சட்டப் பேரவை அமையும்பட்சத்தில் மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திரைமறைவு அரசியல் வேலைகளில் பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com