
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து பொதுத் தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே போட்டியைத் தடுக்கும் வகையில், மதிப்பெண் பட்டியல்களை அறிவித்து, மதிப்பெண் அடிப்படையில் பிரிவுகளை வழங்கும் நடைமுறையை வாரியம் ரத்து செய்துள்ளது.
படிக்க: மிதுனத்துக்கு பணவரவு, உங்க ராசிக்கு? வாரப் பலன்கள்
12-ம் வகுப்பில் இந்தாண்டு 1,12,838 (1.12 லட்சம்) மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் மற்றும் 22,622 பேர் 95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பில் 1,95,799 (1.95 லட்சம்) மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 44,297 பேர் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.