ஊழலுக்கு எதிரான சச்சின் பைலட் நடைப்பயணம் குறித்து காங்கிரஸ் இன்று ஆலோசனை

ஊழலுக்கு எதிராக அதிருப்தி ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவா் சச்சின் பைலட் மேற்கொண்டுள்ள நடைப்பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
ஊழலுக்கு எதிரான சச்சின் பைலட் நடைப்பயணம் குறித்து காங்கிரஸ் இன்று ஆலோசனை

ஊழலுக்கு எதிராக அதிருப்தி ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவா் சச்சின் பைலட் மேற்கொண்டுள்ள நடைப்பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதல்வா் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி கடந்த மாதம் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய சச்சின் பைலட்டின் இந்த நடைப்பயண திட்டம் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக அசோக் கெலாட் செயல்படுவதாக வெளிப்படையாகவே சச்சின் பைலட் கடந்த சில தினங்களுக்கு முன் குற்றம்சாட்டினார்.

தற்போது ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள இந்த நடைப்பயணம், முதல்வா் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதலை புதிய உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. 

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அஜ்மீரில் இருந்து ஜெய்பூா் வரையில் 125 கி.மீ. நடைப்பயணத்தை சச்சின் பைலட் நேற்று (மே 11) தொடங்கினார். இந்த நிலையில், ஊழலுக்கு எதிராக அதிருப்தி ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவா் சச்சின் பைலட் மேற்கொண்டுள்ள நடைப்பயணம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இன்று நடக்கவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில மேலிட பொறுப்பாளா் சுக்ஜிந்தா் சிங் ரான்ட்வானா, மாநிலத் தலைவா் கோவிந்த் சிங் தோடாசாரா, இணை பொறுப்பாளா்கள் குவாஜி முகமது நிஜாமுதீன், அம்ருதா தவன், வீரேந்திர ரத்தோர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையிலான இந்த அதிகார மோதல் கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியமைத்ததில் இருந்து நீடித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சச்சின் பைலட் அசோக் கெலாட்டுக்கு எதிராக செயல்பட்டு வந்தார் என்பதற்காக அவரது மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்தும், துணை முதல்வர் பொறுப்பிலிருந்தும்  அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com