
கோப்புப்படம்
கடல்சார் சர்வதேச எல்லையைத் தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்றிரவு விடுவித்தது.
அரபிக்கடலில் கடல்சார் சர்வதேச எல்லையைக் கடக்கும் மீனவர்கள் மீது அந்தந்த நாடுகளின் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
கடலில் எல்லை தெரியாமல் மீன் பிடிக்கும்போது எல்லைத் தாண்டியதாக பாகிஸ்தான் அரசு 198 மீனவர்களை கைது செய்தது.
படிக்க: ரசிகர்களை காலி செய்திருக்கும் கஸ்டடி: திரைவிமர்சனம்
இந்நிலையில், பிடிபட்ட 198 இந்திய மீனவர்கள் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு வெள்ளிக்கிழமை இரவு விடுவித்தது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத்தரக் கோரி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.