முதல்வர் யார்? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு வருகைபுரிந்த டி.கே.சிவக்குமார்
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு வருகைபுரிந்த டி.கே.சிவக்குமார்


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான உறுப்பினர்கள் வராததால், தாமதமாகத் தொடங்கியுள்ளது. 

பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான (136) இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவை. இதைத் தொடா்ந்து, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாநிலத்தின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்காக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வருகைப் புரிந்துள்ளனர். 

சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜித்தேந்திரா ஆகியோர் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலிட பார்வையாளர்கள் மூவரும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அறிக்கை அளிப்பர் என்று கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com