
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம்(DIAT) பட்டமளிப்பு விழாவில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
உலகம் அதிவேகமாக மாறி வருகிறது. பல தொழில்நுட்ப மாற்றங்களைக் காணக்கூடிய வகையில் பாதுகாப்புத் துறையும் ஒரு மாற்றத்தைக் காண்கிறது.
பாதுகாப்புத் துறையில் பல சிக்கல்கள் எழுந்ததுள்ளன. குறிப்பாக சைபர்ஸ்பேஸில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இருப்பினும் மாறிவரும் சூழ்நிலையுடன் நாம் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.
எந்தொரு சவாலுக்கும், தீர்வு இருக்கிறது. தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் முன்வைக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளிலிருந்து நாம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால், அடிப்படைத் தேவைகள் நாம் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும் என்பதே குறிக்கோள்.
நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும்.
படிக்க: சென்னையில் 2 நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்குமாம்: மக்களே உஷார்!
பிரதமர் மோடியின் தலைமையில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகில் வளர்ந்த நாடாக மாறும்.
பாதுகாப்பு சாதனங்களின் ஏற்றுமதி அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம். கடந்த 2014ல் ஏற்றுமதி 900 கோடியாக இருந்தது, தற்போது 16,000 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியா இப்போது ஸ்டார்ட்-அப்களின் மிகப்பெரிய மையமாக இருப்பதால் புதுமையான யோசனைகளைக் கொண்டு வருவதால் இறக்குமதி குறைந்துள்ளது.
இந்தியாவில் துப்பாக்கிகள், ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. தன்னிறைவு பெற்ற நாடாக மாறிவரும் இந்தியா உலகின் தலைசிறந்த பொருளாதாரமாக மாறும் வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது.
2027ல் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் உறுதிப்படக் கூறுகின்றனர்.
கனவை நனவாக்க, நாம் அனைவரும் அதை நோக்கிச் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.