அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்ற நிலையில் விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. முன்னதாக காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் 'பயங்கரவாத அமைப்புகளான பிஎப்ஐ, பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம்' என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு பாஜக, விஹெச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இதையும் படிக்க | முதல்வர் பதவி விலக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பி.எப்.ஐ. அமைப்புடன் பஜ்ரங் தள அமைப்பை தொடர்புப்படுத்தி பேசியதாக ஹிந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ், மல்லிகார்ஜூன கார்கே மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் கார்கே இழப்பீடாக ரூ. 100 கோடி தர வேண்டும் என்று கோரியுள்ளார்.
பஞ்சாபின் சங்ரூர் நீதிமன்றம் இந்த வழக்கை இன்று விசாரித்த நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டு கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.