
கோப்புப்படம்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 656 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 656 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை (4,49,82,131 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தொற்று பாதித்து ஒரே நாளில் 12 பேர் பலியான நிலையில் இறப்பு எண்ணிக்கை 5,31,790 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 4,44,37,304 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.79 சதவீதமாக உள்ளது.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,037 ஆகக் குறைந்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...