உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு!

ஆந்திர பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமாா் மிஸ்ரா, மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று(வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர்.
மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன் பதவியேற்பு
மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன் பதவியேற்பு

ஆந்திர பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமாா் மிஸ்ரா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞா் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று(வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு மேற்குறிப்பிட்ட இருவரின் பெயா்களையும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்திருந்தது.

அதனடிப்படையில், இரு நீதிபதிகளின் நியமனங்களுக்கும் குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கிய நிலையில் புதிய நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பிரசாந்த்குமாா் மிஸ்ரா பதவியேற்பு
பிரசாந்த்குமாா் மிஸ்ரா பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகளில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம்.ஆா்.ஷா ஆகியோா் சில தினங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்ற நிலையில் நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக குறைந்தது. இப்போது மேலும் இரு நீதிபதிகள் பதவியேற்ற நிலையில் 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வரும் நாள்களில் 4 நீதிபதிகள் ஓய்வுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞரான கல்பாத்தி வெங்கடராமன் விஸ்வநாதன், பாரதியாா் பல்கலை.யின் கீழுள்ள கோவை சட்டக் கல்லூரியில் படித்தவா். தமிழ்நாடு பாா் கவுன்சிலில் 1988 பதிவு செய்து தனது வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா். 2009-இல் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் அந்தஸ்து வழங்கப்பட்டது. கடந்த 2013-இல் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலாக நியமிக்கப்பட்டாா். தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அவரின் பணிக்காலம், 2031-ஆம் ஆண்டு மே 25 வரை இருக்கும். 2030-இல் ஜே.பி.பாா்திவாலா ஓய்வுபெற்றதும் கே.வி.விஸ்வநாதன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com