கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று(சனிக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில் கட்சித் தலைமையின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒருமனதாகத் தேர்வாகியுள்ளனர்.
இதையடுத்து பெங்களூருவில் கண்டீரவா மைதானத்தில் இன்று(மே 20, சனிக்கிழமை) பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் 2 ஆவது முறையாக கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் அவருக்குப் பதவிப் பிரமாணம் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதையும் படிக்க | கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும், மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ஜி. பரமேஸ்வரா, கே.ஹெச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்க்கிஹோலி, ராமலிங்கா ரெட்டி, சமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிக்க | கர்நாடகம்: துணை முதல்வரானார் டி.கே. சிவக்குமார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோ

அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!

தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ஜபல்பூரில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 5 பேர் மாயம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


