கர்நாடகம்: துணை முதல்வரானார் டி.கே. சிவகுமார்!

கர்நாடக மாநில துணை முதல்வராக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் ஜெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
கர்நாடகம்: துணை முதல்வரானார் டி.கே. சிவகுமார்!

கர்நாடக மாநில துணை முதல்வராக காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பெங்களூருவிலுள்ள கண்டிவாரா திடலில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

முன்னதாக கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக்கொண்டார்.

அப்போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவரை கட்டியணைத்து வாழ்த்துகளைக் கூறினார். மேலும், அவரைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் கைக்குலுக்கி டி.கே. சிவகுமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

அவரைத் தொடர்ந்து 8 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கான துறைகள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com