அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சொத்து மதிப்பு வெளியீடு

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2023, 11:51 am IST

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்புகள் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்பட்டியலில், முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு 2020 - 2021 நிதியாண்டின் படி ரூ.65.40 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவரின் அசையும் சொத்துகளின்(நகை, வங்கிக்கணக்கு, கார்) மதிப்பு ரூ.12.52 கோடி என்றும் அசையா சொத்துகளின்(நிலம்,  வீடு) மதிப்பு ரூ.52.88 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் 5 முறை முதல்வராக பொறுப்பேற்ற நவீன் பட்நாயக்கின் அசையா சொத்துக்கள் அனைத்தும் அவரின் பெற்றோர் வழி வந்தவை.

மேலும், மாநில அமைச்சர்களான அசோக் சந்திர பாண்டா, ரானேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மாலிக், பிரித்தி ரஞ்சன் கடாய் உள்ளிட்ட 14 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர்.

ரூ.44 லட்சம் சொத்து மதிப்புகொண்ட சுரங்கத்துறை அமைச்சர் பிரபுல்லா மாலிக்தான் இந்தப்பட்டியலில் வசதி குறைந்தவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.