புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் திறக்கக் கூடாது: ராகுல் காந்தி

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறக்கக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறக்கக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறக்கக் கூடாது; குடியரசு தலைவர்தான் திறக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மக்களவத் தலைவா் ஓம் பிா்லா பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்குமாறும் கோரினாா்.

தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் 1927 -இல் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த கட்டடத்தில் தற்போதைய தேவைக்கு இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இரு அவைகளிலும், எம்பி-க்கள் அமா்வதற்கு வசதி இல்லாததால், உறுப்பினா்களின் பணித் திறனும் பாதிக்கப்பட்டு வந்தது.

இவைகளைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்படி, கடந்த 2020 -ஆம் ஆண்டு டிசம்பா் 10 - ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் அடிக்கல்லை பிரதமா் நரேந்திர மோடி நாட்டினாா். புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடம் தரமான கட்டுமானத்துடன் உரிய நேரத்திலும் கட்டப்பட்டு தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்து புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அழைப்பு விடுத்தாா். இதன்படி, புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி மே 28 ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறக்கக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com