வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? - ஒவைசி கேள்வி

கடந்த 2008 -இல் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி

Updated On :2 நவம்பர் 2023, 8:38 am

புது தில்லி: பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அசாதுதீன் ஒவைசி, கடந்த 2008 -இல் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அமேதி லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்ததைக் கண்டு ஏளனமாகப் பேசிய ஒவைசி, "நீங்கள் அமேதி தேர்தலில் தானாக தோற்றீர்களா? அல்லது பணம் பெற்றுக்கொண்டு தோற்றீர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளதாவது:  

"அன்புள்ள ராகுல் காந்திக்கு யாராவது சொல்லுங்கள், கடந்த 2008-இல் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? ஆந்திராவில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கிரண்குமார் ரெட்டி அரசுக்கு ஆதரவாக எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது? குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க ஜெகன் மோகன் ரெட்டியை சமாதானப்படுத்த எனக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? 

2014 -இல் இருந்து இப்போது வரை நீங்கள் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறீர்கள், இதற்கு நான் பொறுப்பல்ல என அவர் மேலும் கூறியுள்ளார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவ. 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் நான்கு மாநில தேர்தல்களுடன் சேர்த்து டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, அந்த மாநிலத்தில் உள்ள கல்வகுா்தி பகுதியில் புதன்கிழமை  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், பாஜகவுக்கும், தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள பாரத ராஷ்டிர சமிதிக்கும் இடையே மறைமுக புரிதல் உள்ளது.

எங்கெல்லாம் பாஜகவை எதிா்த்து காங்கிரஸ் தோ்தலில் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது என்று குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.