குஜராத்: சூரத் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சூரத்திலிருந்து பிகார் செல்லும் சிறப்பு ரயிலில் ஏறுவதற்கான நெரிசலில் இந்த விபத்து நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாப்தி கங்கா விரைவு ரயிலில் மக்கள் நடைபாதையில் இருந்து ஏற முயற்சிக்கும் போது 40 வயது தக்க மனிதர் தவறி விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது. பின்னர் அவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இன்னும் சிலருக்கு மயக்கமும் அதிர்ச்சியால் ஏற்படும் தாக்கமும் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நடைபாதை காவலர் சிபிஆர் எனப்படும் அவசர சிகிச்சையளித்து காப்பாற்றியுள்ளார்.
இதையும் படிக்க: ஹரியாணா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்!
சத் திருவிழாவுக்காக சூரத் பகுதிகளில் உள்ள நகை மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அலைஅலையாக ரயில் நிலையங்களில் கூடியதால் இந்த நெரிசல் உருவானது. பிகார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்ல தொழிலாளர்கள் குவிந்தனர்.
இறந்தவரின் பெயர் அங்கித் வீரேந்திர சிங் என்றும் அவர் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெரியும் எனவும் காவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.