உத்தரகண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டவர்களுக்கு பைப் வழியாக உணவு விநியோகம்!

சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. 
உத்தரகண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டவர்களுக்கு பைப் வழியாக உணவு விநியோகம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டவர்களுக்கு குழாய்வழியாக உணவு வழங்கப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசியில் ஞாயிற்றுக்கிழமை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளின்போது விபத்து ஏற்பட்டது.

உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அதில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். 

சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றத் தொடங்கியது.

மாவட்டத்தின் அனைத்து அரசு அதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்துள்ள உத்தரகண்ட் அரசாங்கம் உடனடியாக அந்தந்த பணியிடங்களுக்குச் சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு 24 மணி நேரமும் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. 

சில்க்யான் மற்றும் தண்டல்கான் பகுதிகளை இணைக்கும் வகையிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

சரிந்துவிழுந்த பகுதிகள் ஈரமாக உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்துவதில் மீட்புக்குழுவினர் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். 

இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு குழாய் வழியாக தொடர்ந்து ஆக்சிஜன் வருகிறது. உத்தரகண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com