ஜகார்த்தாவில் நடைபெறும் 10வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நவம்பர் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பையொட்டி, அதில் பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்த உள்ளார். இந்த அமர்வுகளின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் விவாதிப்பார்கள்.
ஏடிஎம்எம் பிளஸ்-இன் தலைவராக இருப்பதால் இந்தோனேசியா இக்கூட்டத்தை நடத்துகிறது. நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் இந்த சந்திப்பின்போது, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச உள்ளார்.
ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும், அந்த அமைப்பின் உறுப்பினரல்லாத உரையாடல் பங்கேற்பாளர்களுக்கும் இடையிலான ஒரு தளமாகும். ஆசியான் அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பத்து நாடுகள் உறுப்பினராக உள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் உறுப்பினரல்லாமல் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றன.
இதையும் படிக்க: ஓபராய் குழுமத் தலைவர் பிரித்வி ராஜ் சிங் ஓபராய் காலமானார்
ஆசியான் பிளஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2017-ஆம் ஆண்டு முதல், இதன் அமைச்சர்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுக்ரன்! பெண் கொடுமைகளுக்கு எதிராக வாதாடும் மாஸ் வழக்கறிஞராக விஜய்!

வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

முதல்வர்களின் படங்களை வைப்பதில் போட்டி! பாதியில் முடிந்த காஞ்சிபுரம் மாமன்றக் கூட்டம்!

தமிழகத்தை வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்ல அண்ணாமலை வலியுறுத்தல்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



