அரசியலில் சிறந்த நடிகர் மோடி: வைரலாகும் பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

அரசியலில் சிறந்த நடிகர் மோடி: வைரலாகும் பிரகாஷ் ராஜ் விமர்சனம்!

நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 
Published on

நடிகர் பிரகாஷ் ராஜ், விவாத நிகழ்ச்சியொன்றில் மோடி குறித்து பேசிய கருத்து வைரலாகி வருகிறது.

அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்வியில்,  “நீங்களும் கமல்ஹாசனும் நடிகராக இருந்து தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுள்ளீர்கள். சிறந்த நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற்றுள்ளார்களா? ” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ”மோடி இருக்கிறாரே. அவரைப் போல சிறந்த பேச்சாளரை நான் பார்த்ததே இல்லை. சிறந்த நடிகர். அவருக்கென்று பிரத்யேக உடைத்தேர்வு பிரிவு, மேக்-அப் பிரிவு, சிகை அலங்கார பிரிவு ஆகியவையெல்லாம் உள்ளன” எனப் பகடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

வைரலாகி வரும் இந்தக் கருத்துக்குப் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

சத்தீஸ்கர், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தெலுங்கானா தேர்தல் களம் குறித்து பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார். அவர் நேரடியாக எந்த அணி சார்பிலும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லையெனினும் ஆளும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு மறைமுகமாக தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com