
ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் அமைச்சர் அமின் பதான், காங்கிரஸில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.
அமின் பதான் முன்னதாக, ராஜஸ்தான் மாநில சிறுபான்மை மோர்ச்சா மற்றும் மாநில ஹஜ் கமிட்டியின் முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக இருந்துள்ளார்.
200 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தேர்தல் 2 நாள்களில், நிதியுதவி இன்று... : காங்கிரஸ் குற்றச்சாட்டு!

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...