சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளுக்குத் தீர்வு! 3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே முடிவு

ரயில்களில் காத்திருப்புப் பட்டியலைத் தவிர்த்து அனைவருக்கும் இருக்கைகள் கிடைக்க, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 நவம்பர் 2023, 7:39 am

DIN

ரயில்களில் காத்திருப்புப் பட்டியலைத் தவிர்த்து அனைவருக்கும் இருக்கைகள் கிடைக்க, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

பயண வசதி, கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் ரயில்கள் போதுமானதாக இல்லை என மக்கள் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. 

இதனால், ரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியல் நிலையிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் இருக்கின்றன.

இந்நிலையில் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளை உறுதி செய்யும்பொருட்டு இன்னும் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்யும் பொருட்டு அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் 3,000 புதிய எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

கரோனாவுக்கு முன் 10,186 ரயில்கள் இயக்கப்பட நிலையில் தற்போது நாடு முழுவதும் 10,748 ரயில்கள் இயக்கப்படுவதாகவும் ஆண்டுக்கு 800 கோடி பேர் பயணிக்கும் நிலையில் இது அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடியாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக 2027-28 ஆம் ஆண்டில் அனைத்து பயணிகளுக்கும் பயணிப்பதற்கான டிக்கெட் உறுதி செய்யப்படும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்படும் என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.