செந்தில் பாலாஜி உடல் நிலை: அமைச்சா், மருத்துவா்கள் விளக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
செந்தில் பாலாஜி உடல் நிலை: அமைச்சா், மருத்துவா்கள் விளக்கம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மற்றொருபுறம், செந்தில் பாலாஜியின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மேலும் சில பரிசோதனைகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு அண்மையில் பை-பாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நெஞ்சகப் பகுதியில் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. கை மற்றும் கால்கள் மரத்துப் போகும் நிலை, உடல் எடை குைல், உயா் ரத்த அழுத்தம், தூக்கமின்மை உள்பட பல்வேறு பாதிப்புகளுக்கு அவா் உள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயவியல், நெஞ்சகவியல், நுரையீரல், ஜீரண மண்டலத் துறை, நரம்பியல் துறை மருத்துவா்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனா். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என்றாா்.

இதனிடையே, மருத்துவா்கள் சிலா் கூறியதாவது: செந்தில் பாலாஜிக்கு இசிஜி, எக்கோ, சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன், பல்வேறு ரத்தப் பரிசோதனைகள், நுரையீரல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா் சிகிச்சையின் காரணமாக தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது.

அதேவேளையில் பித்தப்பையில் கொழுப்புச் சத்து சோ்ந்து கற்களாக மாறியுள்ளன. அதை மருந்தின் மூலமாக சரிசெய்யலாம். மற்றபடி அவருக்கு வேறு பாதிப்புகள் எதுவும் இல்லை.

இருப்பினும், எம்ஆா்ஐ பரிசோதனைகள், ஜீரண மண்டல பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் பிறகே அவரை மருத்துவமனையிலிருந்து சிறைக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com