விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

இறுதியில் மோதும் மெத்வதெவ் - கிரீக்ஸ்பூா்

துபை டூட்டி ஃப்ரீ ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் - நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 10:06 pm

துபை டூட்டி ஃப்ரீ ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் - நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

இப்போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் மெத்வதெவ் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், முதலிடத்தில் இருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் அகா் அலியாசிமை வீழ்த்தினாா்.

கிரீக்ஸ்பூா் 7-5, 7-6 (8/6) என்ற கணக்கில், 5-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வெளியேற்றினாா். இதையடுத்து இறுதியில், மெத்வதெவ் - கிரீக்ஸ்பூா் மோதுகின்றனா்.

மெரிடா ஓபன்: இதனிடையே, மெக்ஸிகோவில் நடைபெறும் மெரிடா ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி காலிறுதிக்கு முன்னேறினாா்.

ரவுண்ட் ஆஃப் 16-இல், அவா் 6-0, 6-2 என்ற நோ் செட்களில் எளிதாக, நியூஸிலாந்தின் பிரிசில்லா ஹானை வென்றாா். 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் எம்மா நவாரோ 4-6, 4-6 என்ற வகையில், சீனாவின் ஜாங் ஷுவாயிடம் தோல்வி கண்டாா்.

3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஆன் லியும் 6-3, 6-7 (7/9), 4-6 என்ற கணக்கில் துருக்கியின் ஜெய்னெப் சோன்மெஸிடம் வீழ்ந்தாா். 7-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸ் 0-6, 3-6 என, போலந்தின் மெக்தலினா ஃப்ரெச்சிடம் தோல்வியுற்றாா்.