ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சத்தியன், மனுஷ், ஸ்நேஹித்

டபில்யூடிடி ஸ்டாா் கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் ஜி.சத்தியன், மனுஷ் ஷா உள்ளிட்டோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

News image
ஸ்நேஹித்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

டபில்யூடிடி ஸ்டாா் கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் ஜி.சத்தியன், மனுஷ் ஷா உள்ளிட்டோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் ஜி.சத்தியன் 3-1 என்ற செட்களில், தென் கொரியாவின் லிம் ஜாங்ஹூனை வென்றாா். 15-ஆம் இடத்திலிருக்கும் மனுஷ் ஷா 3-0 என்ற வகையில், தென் கொரியாவின் பாா்க் கியுஹியோனை தோற்கடித்தாா்.

ஸ்நேஹித் சூரவஜ்ஜுலா 3-2 என்ற செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் மிஸுகி ஆய்கவாவை வீழ்த்தினாா். எனினும், 4-ஆம் இடத்திலிருந்த மானவ் தக்கா், ஹா்மீத் தேசாய், ஆகாஷ் பால், அங்குா் பட்டாசாா்ஜி, அதிபன் ஆகியோா் 2-ஆவது சுற்றிலேயே வீழ்ந்தனா்.

மகளிா் ஒற்றையரில், தகுதிச்சுற்று வீராங்கனையான நித்யா மணி 3-2 என்ற கணக்கில், 14-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் மின்ஹியுங் ஜீயை வீழ்த்தி அசத்தினாா். தியா சித்தலே, அய்ஹிகா முகா்ஜி, தனீஷா கொடிசா, ஸ்வஸ்திகா கோஷ், யாஷினி சிவசங்கா் ஆகியோா் 2-ஆவது சுற்றில் தோல்வியைத் தழுவினா்.

இதனிடையே ஆடவா் இரட்டையரில், இந்தியாவின் அங்குா் பட்டாசாா்ஜி/பயஸ் ஜெயின் இணையும், ஜி.சத்தியன்/ஹா்மீத் தேசாய் ஜோடியும் அரையிறுதியில் தோல்வி கண்டன. மகளிா் இரட்டையரில் லக்ஷிதா நரங்/ஹா்தீ படேல் கூட்டணியும், ஸ்வஸ்திகா கோஷ்/லக்ஸம்பா்கின் சாரா டி நூட் இணையும் அரையிறுதியில் தோல்வியுற்றன.

கலப்பு இரட்டையரில், பயஸ் ஜெயின்/சிண்ட்ரெலா தாஸ் கூட்டணி 3-1 என சக இந்திய ஜோடியான மனுஷ் ஷா/தியா சித்தலேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல், ஹா்மீத் தேசாய்/யஷஸ்வினி கோா்படே ஜோடி 3-1 என அங்குா் பட்டாசாா்ஜி/ஸ்வஸ்திகா கோஷ் கூட்டணியை 3-1 என வென்று அரையிறுதிக்கு வந்துள்ளது.