ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

இறுதிச்சுற்றில் மோதும் அல்கராஸ் - ஃபில்ஸ்!

கத்தாா் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

News image

காா்லோஸ் அல்கராஸ் - ஏபி

Updated On :21 பிப்ரவரி 2026, 10:17 pm

கத்தாா் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

முன்னதாக அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரும், கேரியா் கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான அல்கராஸ் 7-6 (7/3), 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை தோற்கடித்தாா்.

ஃபில்ஸ் தனது அரையிறுதியில், 6-4, 7-6 (7/4) என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வீழ்த்தினாா். இதையடுத்து இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ஃபில்ஸ் மோதுகின்றனா். இருவரும் இதுவரை 2 முறை மோதியிருக்க, இரண்டிலுமே அல்கராஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்விடோலினா - பெகுலா பலப்பரீட்சை: துபையில் நடைபெறும் மகளிருக்கான டூட்டி ஃப்ரீ டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா - உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோா் மோதுகின்றனா்.

ஒற்றையா் பிரிவு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் பெகுலா 1-6, 6-4, 6-3 என்ற கணக்கில், சக அமெரிக்கரும், 2-ஆம் இடத்தில் இருந்தவருமான அமாண்டா அனிசிமோவாவை வெளியேற்றினாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் ஸ்விடோலினா தனது ஆட்டத்தில், 6-4, 6-7 (13/15), 6-4 என்ற வகையில், 3-ஆம் இடத்தில் இருந்த அமெரிக்காவின் கோகோ கௌஃபை சாய்த்தாா்.

இதையடுத்து இறுதியில், பெகுலா - ஸ்விடோலினா சந்திக்கின்றனா். இருவரும் இதுவரை 8 முறை மோதியிருக்க, அதில் பெகுலா 5 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

சாம்பியன்: இதிலேயே மகளிா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் லூசியா ஸ்டெஃபானி/கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி இணை 6-1, 6-3 என்ற நோ் செட்களில், ரஷியாவின் வெரா ஸ்வோனரெவா/ஜொ்மனியின் லாரா சிக்மண்ட் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.