தேர்தலில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானுக்கு வருகிற நவ. 25 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில், 'தேர்தல் நேரத்தில் மதம், சாதி என்று ஏன் பேசுகிறார்கள் என யோசிக்க வேண்டும். மக்களுக்காக வேலை செய்யும் உண்மையான தலைவர், சாதி, மதத்தை வைத்து வாக்கு கேட்க மாட்டார். அவருடைய உழைப்பின் அடிப்படையில் மக்களிடம் வாக்கு கேட்பார்.
கடந்த 18 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினர் ஆட்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தாங்கள் செய்த எந்த வேலையையும் கூறி வாக்கு கேட்பதில்லை. மாறாக, சாதி, மதம் பற்றி பேசுகிறார்கள்.
பெரிய தொழிலதிபர்களின் நன்மைக்காகவே பாஜக செயல்படுகிறது. ஏழை, நடுத்தர மக்களைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டக்களத்தில் இறங்கியதால் பாஜக முற்றிலும் பிளவுபட்டுள்ளது.
ராஜஸ்தானில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்' என்று பேசினார்.
இதையும் படிக்க | உக்ரைனுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் திடீர் பயணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

8 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!
ரூ.500 லஞ்சம்... 36 ஆண்டுகளுக்குப் பின் காவலரின் தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம்!

மறுவெளியீடாகும் தாம் தூம்! தேதி அறிவிப்பு!
சசியின் நூறு சாமி முதல் தோற்ற போஸ்டர்!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

