மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரமில்லை, ஆனால்...! பிரியங்கா காந்தி தாக்கு

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல நேரமில்லாத பிரதமருக்கு அகமதாபாத்தில் கிரிக்கெட் போட்டியை காணச் சென்றதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 
மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரமில்லை, ஆனால்...! பிரியங்கா காந்தி தாக்கு

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல நேரமில்லாத பிரதமருக்கு அகமதாபாத்தில் கிரிக்கெட் போட்டியை காணச் சென்றதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தானில் பேரவைத் தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபுராவில் நடைபெற்ற பேரணியில் இன்று அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, 

மோடி தன்னை ஃபக்கீர் என்று கூறிக்கொள்வதாகவும், அவரது ஆட்சியில் பாஜக எப்படி பணக்கார கட்சியாக மாறியது என்றும் கேள்வி எழுப்பினார். 

மணிப்பூர் ஏழு மாதங்களாக இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு அங்குச் செல்ல நேரமில்லை, மாறாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண அகமதாபாத்திற்குச் சென்றார். 

உலகக் கோப்பையில் இந்தியர்களின் கடின உழைப்பால் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெருமையும், மரியாதையும் இருந்தால் பிரதமர் ஒரு இடத்திற்குச் செல்வார் ஆனால் நெருக்கடி சூழ்நிலையிலிருந்து விலகி இருப்பார். 

பிரதமர் மோடியும், மத்திய அரசும் பெரிய தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்ததாகவும், ஆனால் ஏழைகளைப் புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டிய அவர் அரசியலில் மதத்தைக் கலப்பது பாவம் என்றும் கூறினார்.

காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் யாதவ், இந்திரஜ் குர்ஜார் ஆகியோரை ஆதரித்து பிரியங்கா காந்தி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று, டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com