

மகாராஸ்டிர மாநிலம் கொல்ஹாப்பூரில் உள்ள மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு தங்களிடம் வாங்கப்பட்ட கரும்புகளுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையின் (FRP) அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய கூடுதல் தொகையை வழங்கிடக்கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கொல்ஹாப்பூரில் உள்ள விவசாயிகள் சங்கத்தின் தலைவரும் இந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ராஜு ஷெட்டி, கடந்த ஆண்டு வாங்கப்பட்ட கரும்பில் ஒரு டன்னுக்கு கூடுதலாக 100 ரூபாய் வீதம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : மீட்புக் குழாய் வழியாக தொழிலாளர்கள் எப்படி வெளியேறுவர்? விளக்கம்
மேலும் கடந்த ஆண்டுக்கான கூடுதல் தொகையை வழங்க மறுக்கும் மில் உரிமையாளர்கள், அடுத்த ஆண்டிலிருந்து கூடுதல் 100 ரூபாயுடன் கரும்பு வாங்குவதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டுக்கான தொகை வழங்கப்படாமல் போராட்டம் நிறுத்தப்படாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெடுஞ்சாலை இன்னும் முடக்கப்பட்டிருப்பதாகவும், வாகனங்கள் வேறு வழியில் திருப்பப்பட்டு வருவதாகவும் கொல்ஹாப்பூரின் காவல் கண்காணிப்பாளர் மஹேந்திர பண்டித் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.