ராகுல் காந்தியின் விமர்சனத்தை மிகைப்படுத்தியுள்ளனர்: மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தியின் விமர்சனத்தை தேர்தலுக்காக மிகைப்படுத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் விமர்சனத்தை மிகைப்படுத்தியுள்ளனர்: மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தியின் விமர்சனத்தை தேர்தலுக்காக மிகைப்படுத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் விமர்சனத்தில் எந்த பிரச்னையும் இல்லை.

தேர்தலுக்காக அவரின் விமர்சனத்தை மிகைப்படுத்தி புகார் கூறியுள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக உரிய முறையில் விளக்கம் அளிப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “அரசு நிறுவனங்களின் மூலம் மக்களை அச்சுறுத்த பாஜக முயற்சித்து வருகின்றது. அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பின் மூலம் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்களுக்கு நெருக்கடி அளித்து வருகிறது” என்று கூறினார்.

முன்னதாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமா் நரேந்திர மோடியை ‘கொள்ளையடிப்பவா்’, ‘பெரும் தொழிலதிபா்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்பவா்’ என பேசினார். அவரின் இந்தப் பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்குத் தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை (நவ.23) நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸுக்கு சனிக்கிழமை (நவ.25) மாலைக்குள் விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டபேரவைக்கு நாளை (நவ.25) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com